உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Tuesday 18 October 2011

polur photoes...

polur

polur

polur

polur

shctpt

Monday 8 August 2011

தொலைந்த காலங்கள்....




காணாமல் போனவைகள்

இந்த நவீன யுகத்தில் பல பழக்க வழக்கங்கள்,பொருட்கள் மறைந்து காண்பதற்கு அரிதாகி விட்டது.பெரியம்மா,பெரியப்பா,சித்தி,சித்தப்பா,மாமா,மாமி,என்ற முறைகள் எல்லாம் மறைந்து பொதுவில் ஆண்ட்டி,அங்கிள் என்று தங்களின் பாசத்தினைப்போன்று உறவு முறைகளையும் சுருக்கிக்கொள்கின்றனர்.
சகோதரி மாதேவி(சின்னு ரேஸ்ரி ) அரிதாகிப்போன பொருட்கள் ,சாதனங்கள் என்று அந்தக்காலத்தில் புழக்கத்தில் இருந்தபொருட்களை அழகாக படம் எடுத்து போட்டு கருத்தை கவர்ந்து இருந்தார்.நான் சிறிய வயதில் கண்டு,அனுபவித்து களித்த பொருட்களை இப்பொழுது காண்பது அரிதாகிவிட்டது.அப்படி அரிதாகிப்போன பொருட்கள்,ஜீவன்களை கூகுளில் தேடிப்பிடித்து உங்கள் முன் படைக்கிறேன்.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK6fErqgqgYKeJbcwLHYRUL4awr3lpOwRtDipfy3g_s1CFelgN0uboU5RF_lD3CEMpVA00nuQvc2aHv7570YPMz088HLfdbbdllL_vWjQT3LdpuVEJY1umCpd3ep0LjlBn_M3wrzPHemsh/s320/210px-Betel_leaf_betel_nuts_and_lime.jpg
வெற்றிலை தட்டு
அந்தகாலத்தில் உறவினர்,நண்பர்கள் இல்லங்களுக்கு சென்றால் உபச்சாரங்களுக்கு பிறகு இறுதியில் வரும் தட்டு.பாக்கு,வெற்றிலை,சுண்ணாம்பு,இதர வாசனைபொருட்கள் நிரப்பி வைத்திருக்கும் தாம்பூலத்தட்டு.கூடச்செல்லும் சிறார்களுக்கு அதிலேயே கண்ணாக இருக்கும்.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எடுத்து வாயில் அதக்கிகொள்ளும் சிறியவர்களில் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது?தட்டு வடிவில் மட்டுமில்லாமல் அன்னம்,மயில் சேவல் பூ வடிவங்களில் கூட இருக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirPnsWGisyhg5VthsJxv0LyxDyLbWJU2JWsJR55yMcbdzh7-iCMlFqlzVMO5eRmg2HZ9eXpJDl1YnTftFHztw07CTXnyjcN5lL_v-LqhB3NYUd5AaZQnjgQo5obWx5dVcIy05HPZajabXJ/s320/boom+boom+maadu.jpg
பூம் பூம் மாடு
மாடுகளை கன்னா பின்னா வென்று துணிகளால் அலங்கரித்து உடுக்கை ஒலியுடன் வருவார் மாட்டுக்காரர்.உடுக்கையை ஒலிக்கச் செய்து கேள்வி கேட்டால மாடு தலையை தலையை ஆட்டும் .இதனை வேடிக்கைப்பார்ப்பதற்காக ஒரு கூட்டமே பின்னால் திரியும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHCEf41lR6KLajxSKsGwwltB2bObk0UESH3Vqvz762pbIHu48YVUf8DXwikpbtXXuSJibFjVtwhNct7t1ueQMJ4xYsv3i1rO4nfF3ih2GGDU0gMdX690TgK7SLCY3UIidfU52138JLoynR/s320/bullock-cart.jpgபொட்டு வண்டி

"
மாப்பிள்ளை வர்றார் மாப்பிள்ளை மாட்டு வண்டியிலே.பொண்ணு வர்றா பொண்ணு வர்றா பொட்டு வண்டியிலே"என்று ஒரு சினிமா பாடல் கூட உண்டு.மாட்டுவண்டியில் அழகாக வேயபட்ட கூடாரத்துக்குள் திண்டுகள் அமைத்து,அழகாய் அலங்கரித்து மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் சலங்கை சல் சல் என்ற ஒலியின் பின்னனியில் திண்டில் படுத்துக்கொண்டே இடமும் வலமுமாக ஆடிக்கொண்டே பயணிக்கும் சுகத்திற்கு பிசினஸ் கிளாஸ் விமானப்பயணம் கூட ஈடாகாது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZgjTB9NAldcQkfUJYYq9arTgekNL6y7S2wDJvgiekCh95K05nupnuAS7_cNPYwEpe3e5Pa3ggr_7jzNFI3mNuOlX8nkkCjZfNwy9adne3hxTVfbgANBzRpy8X5IDpo610fNRNz2A7fABf/s320/goli+soda.jpgகோலி சோடா
பெப்சி கோக் என்று வெளிநாட்டு சமாச்சாரங்கள் வந்த பின் காணாமல் போன வஸ்து.அப்பொழுதிருந்தே இந்த கோலியைஎப்படி பாட்டிலுக்குள் அடைக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.கோலிசோடா உடைப்பானை வைத்து கோலியில் அழுத்தினால் புஸ் என்று வரும் சப்தத்திற்கு பயமாக இருக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4_oNXkprQAMCpPvXkzO219ar8Sy1lYayrXFc5ognadfP5a54jUVUVRXZ1UGjK6u0XIGw80LHYr1Cjyhs2x5fg1acoMKK4tjErYW8FeGoUHwiVsGsgaj0zBtsqFXxrSjN-8njMjF42jedD/s320/koozi.jpg
 
தெருக்கோழி
க்ஹும்..க்ஹும் என்று குரல் கொடுத்துக்கொண்டு தெருவில் குடு குடு வென்று ஓடும் கோழி.கோழியின் உரிமையாளர்கள்அந்தி சாயும் நேரம் தங்கள் கோழிகளை அடைப்பதற்காக தேடி பிடிப்பார்கள்.என்னுடைய போந்தா கோழியை பார்த்தியா?செவலைக்கோழியைப்பார்த்தியா?நாட்டுககோழியைப் பார்த்தியாஎன்று தேடும் குரல்களாகவே ஒலிக்கும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMwOiJPcfw5qA9Fy6AbIDtOiVdq8d87blfR-N42goyu8TvKGqb_7G-lCiiCUpmNv5BYziiRLs6X57I3el4AD3cdZRwDJejsrcSP1yBdqn4pFqgWcRy6AsUmdxl7pkuRMJ_-KGNRQQ11k4Y/s320/nungu+vandi.jpg
 
நுங்கு வண்டி
உபயோகித்த நுங்கு கோந்தைகளில் கம்பை வைத்து வண்டியாக செய்து தெருவில் இழுத்து செல்வார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikmBRJ3MRTGCoefq7Y2nWF4QeVVQqPRzxM4KfMwERY862LiyrKGto3q8QsjSdAqEBRfnT-NMe-vkK6lJPHe-rdRRI7MvWejUI2pp9XALi9tx-SdSsLAKTp39w9ZD-PZzgpkZJDJsyM5ImX/s320/Nut+seller.JPG
கடலைக்காரர்

"
கல்லே கல்லே வற்த்த கல்லே கல்லே" கூவும் கடலைக்காரர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?எப்படித்தான் பக்குவமாகவறுத்தாலும் அந்த டேஸ்ட் வரவே செய்யாது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ3fd9FQeStOH8mpRArnHjPJovmQ5j41q8-ReJfaEKoBYVSqte0VSu_W4xFkWvh2bg5TX8XTMFJa8aZFtKYDqy4aqsKHT3m95cIQTXpPUoAL3TQ2SE2xxzrrwOAQYNXel0gJwAWNgLKhRq/s320/Pallanguli.jpg
பல்லாங்குழி

14 
குழிகள் அமைந்த அந்தகால இண்டோர் கேம்.சோழிகளை போட்டு விளையாடுவார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi127Ih1KTv7YJeHRlVyq3OxYZKEkt82FyJyl0rvek90BOArN_oNs-jrNcV959QvaWKWD8ooOZLQlr1TtnA-_pK0II03nYL8HA6TlzZfU8heAIQOPW6VuLr4MoOd35_lsHCZZx_0hu7c60x/s320/pattu+puusi.jpgபட்டுப்பூச்சி
மழைகாலங்களில் வரும் ஒரு அழகான பூச்சி.அழகிய சிகப்பு நிறத்தில் சிலந்தி வடிவில் பட்டுப்போன்ற மெனமையுடன்கரங்களில் குடு குடு என்று ஓடும் பொழுது மயிற்கால்களெல்லாம் சிலிர்த்துப்போகும்.இந்த பூச்சிகளை சேகரித்து தீப்பெட்டிகளில் வீடு அமைத்து மகிழ்வார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMkUx5mGwU-SzipK9uMX3ZIwK_54F9jd0lnWuF3QnoBTrNVkhM4FZdUDqNzFM0MaWPUdkO3DvncRAASgCQQq2wl3Xn1vh5U-fNDRpJMg8A1A49Zdc3WlghoFYkX7ZINiS5caH2ZfbCJUlC/s320/school+bell.jpgஸ்கூல் பெல்
எப்போதடா நாண்கு மணியாகும் என்று காத்திருந்து பல சிறார் உள்ளங்களை துடிப்புடன் எதிபார்க்க வைக்கும்சஞ்சீவி.காண்டா மணி போன்று பெரிய மணியை வைத்து கைகளால்,அல்லது கயிற்றினால் ஆட்டுவார்கள்.சில பள்ளிகளில் பெரிய இரும்பு தகட்டை தொங்க விட்டு சுத்தியலால் அடிப்பார்கள்.பள்ளி பியூன் அடித்து முடியும் வரை காத்திருந்து சுத்தியலை கெஞ்சி கேட்டு வாங்கி ஓங்கி ஒரு அடி கொடுத்து வரும் ஒலியில் பூரித்து நிற்பார்கள் மாணவர்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGb1CurGAbQgVs3RKzXSCK3FGtF_ULKakeE-up_wiOzFF_03634Uqe_P2h1eGPglvQ9fYnB_glfkWuBtbCVoT2d9DYGXAdKOWPOMklqta60h07YTaqejQNQzIpH6RxozYuLo3p3DXWdcKO/s320/%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpgஅம்மி கொத்துபவர்
அம்மி கொத்தலையோ அம்மி என்று தெருவில் கூவார்கள்.அரைத்து அரைத்து தேய்ந்து போன அம்மியை உளியை வைத்து கொத்தினால் நன்றாக அரைபடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.அம்மியில் தாமரைப்பூ,சூரியன்,ரோஜாப்பூ சூரியகாந்தி போன்ற வடிவில் நம் விருப்பத்துக்கேற்ப கலைநயத்துடன் அம்மி கொத்தும் அழகே தனிதான்.இப்பொழுது அம்மி கொத்துபவர் மட்டுமல்ல அம்மியுமே காணாமல் போய் விட்டது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpz5GLG5_fkOX1XDgKGIZPgAA2D69eOezfRrVBGKqjz3gC0q8EESd9kl3ZY6cW0xfCcq-eCgOfG8eV-HuhaTvurXqNAxsbdHsx7RewKGo6Q_QjTXV21KyquMHVOgYlgnC6b9HWLIpdJ-vo/s320/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF+%25E0%25AE%2590%25E0%25AE%25B8%25E0%25AF%258D.JPG
ஐஸ் வண்டி
சைக்கிள் கேரியரில் சதுர வடிவ மரப்பெட்டியை கட்டி வைத்துக்கொண்டு ஆரஞ்ச் கலர் குச்சி ஐஸை ஆரஞ்சு ஐஸ்என்றும்,ஊதா நிற குச்சி ஐஸை திராட்சை ஐஸ் என்றும்,வெள்ளை நிற குச்சி ஐசை சேமியா ஐஸ் என்று நாமகரணம் வைத்து விற்பார்கள்.ஐஸை சாப்பிட்டு விட்டு நாக்கை நீட்டி கலர் நன்றாக ஏறி இருக்கின்றதா என்று சிறுவர்கள் பார்த்துக்கொள்வதே அழகுதான்.
_1_~1.PNG
 
குடுகுடுப்பைக்காரர்
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று கூவிக்கொண்டே வருபவர்.இவரைக்கண்டால் சிறுவர்களுக்கு கிலி.மை போட்டு மயக்கம் கொடுத்து சுடுகாட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்று பெரியவர்கள் எச்சரித்ததின் விளைவு.குடு குடுப்பை ஓசையை அநேகமாக ஒளிந்திருந்தே கேட்பார்கள்.
_1_~1.JPG
டூரிங் டாக்கீஸ்
டெண்டு கொட்டகை,சினிமா கொட்டகை என்று அழைக்கப்படும்.அநேகமாக ஆஸ்பெடாஸ் ஷீட்களை கூரையாககொண்டது.தரை டிக்கட் என்பது மணலில் அமர்ந்து படம் பார்ப்பது.இருப்பதிலேயே ஒசத்தியான டிக்கட் பால்கனி,திரைக்கு முன்பாக சிகப்பு நிற பெயிண்ட் பூசப்பட்ட வாளிகளில் மணலை நிரப்பி இருப்பார்கள்.தீப்பிடித்தால் மணலை வீசி தீயைஅணைப்பதற்காகவாம்.தியேட்டருக்குள்ளேயே முறுக்கு,வடை,பூரி போன்ற தின்பண்டங்களை பாடல் காட்சிகளின் போது தட்டில் வைத்து கூவி கூவி விற்பார்கள்.திரையில் எம் ஜி ஆர் தொட்டால பூ மலரும் என்று ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு இருப்பார்.அலுமினிய தட்டுகளில் பண்டங்களை வைத்துக்கொண்டு வடே,முருக்கூகூ,பூரீஈஈஈ கூவலும் கூடவே வரும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-X5mpckhwnlHmm_0queJp9cczpuoAdUqn3uOEf-pkaS2aRHroh8qDx4_DaWOR4_PrIQtB-XiCk2YrLXMNm6q9O20u3mcgfax0yKmsLD2G_xUT_pmvkMaXpWDT8-7ufZ3FhGOeciYntm61/s320/%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpgபட்டை சோறு
தென்னந்தோப்புகளுக்கு,தூரத்து தீவுகளுக்கு பிக்னிக் செல்லுவார்கள்.சாப்பிடுவதற்கு தட்டோ,டிஸ்போசபிள் தட்டோஇருக்காது.பனை ஓலையில் அழகாக செய்யப்பட்ட தொன்னையில் சூடான சாதத்தின் மேல் களறிக்கறியும்,தாளிச்சாவும் பச்சை ஓலை மனத்துடன் கூடிய பட்டை சாப்பாடு..ஆஹா..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ0Tk5oUTOCsl_vh_XX-JT057FcvjojFd6-W0rzCrMJ6NkxuOHRefkAbp_e-aZr0gg8Edj_XnuRzqEk9XLmUAhRx9k5AbmW0aXBBzh-s3tKVvEsxuA839QtZOhSzHXEtqs1LwlESUywNYm/s320/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.JPG
பாம்படம்
அந்த காலத்து மாற்றுமத பாட்டிகள் காதில் அணிந்து இருந்த ஒரு பயங்கரமான ஐட்டம்.காது ஓட்டையை பார்த்தாலேகிலியாக இருக்கும்.பாம்படம் தொங்க அம்மியில் உட்கார்ந்து மசாலா அரைக்கும் பொழுது பாம்படங்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே சொல்லி மாளாது.அதை ரசிக்கவென்றே ஒரு சிறார் கூட்டம் நிற்கும்.
222.jpg
பொம்மலாட்டம்
திருவிழா,பெருநாள் திடல்,மற்றும் தர்ஹாக்களில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றில் இந்த பொம்மலாட்டாக்காரர்கள் கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவார்கள்.பொம்மைகள் நடனத்தை கண் கொட்டாமல் உட்கார்ந்து ரசிப்பது மட்டுமல்லாமல் ஆட்டம் முடிந்ததும் மெதுவாக திரைக்கு அருகில் போய் எப்படி இப்படி பொம்மைகள் இந்த ஆட்டம் போடுகின்றது என்று ஆராயும் நிமித்தமாக அங்கும் இங்கும் சுற்றித்திரிந்ததை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
333
மிக்சர் வண்டி
இரவானால் டொடய்ங்..டொடய்ங் என்று மணி சப்தம் கேட்டாலே மிக்சர் வண்டிக்காரர் வந்து விட்டார் என்று அர்த்தம்.ஓமப்பொடி,காராபூந்தி,றுத்த கடலைவகைகள்,சிப்ஸ்,காராச்சேவ்,னிப்புசேவ் ,ரிப்பன் பகோடா,பகோடா,வேர்க்கடலைமுறுக்கு என்று அடுக்கிக்கொண்டு கலர் கலர் கண்ணாடி போட்டு அடைத்த தள்ளுவண்டியில் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் விற்பனை செய்யப்படும் வணடியை சுற்றி சிறுவர் பட்டாளம் மட்டுமின்றி பெரியவர்களும் வாடிக்கையாளர்கள்.பெட்ரோமாக்ஸ் சூட்டில் பட்சணங்கள் சூடாக அப்பொழுது செய்த பட்சணங்கள் போல் இருக்கும்.
44
ஜவ்வு மிட்டாய்
மூங்கில் களியின் உச்சியில் ஒரு பொம்மையைக்கட்டிக்கொண்டு அடியில் தொங்கும் கயிற்றை பிடித்து இழுத்தால் பொம்மையின் இருகரங்களிலும் இணைத்து இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி எழுப்பினாலே போதும்.வாண்டுகள் சிட்டாய் பறந்து வீதிக்கு வந்து வந்து விடுவார்கள் சில்லரைகாசுகளுடன்.பொம்மைக்கு அடியில் சுற்றப்பட்ட ஜவ்வுமிட்டாயை சுற்றிலும் பிளாஸ்டிக் கவர் போட்டு ஈ மொய்க்காத வண்ணம் மூடி இருக்கும் ஜவ்வு மிட்டாயை எடுத்து வளையல்,வாட்ச்,பிரேஸ்லெட்,மோதிரம்,கொசுராக நெற்றியில் ஒரு பொட்டு,கன்னத்தில் ஒருதிருஷ்டி பொட்டு ஒட்டி விடும் மிட்டாய்க்காரரின் கை லாவகத்தையே கண் சிமிட்டாமல் பார்க்கும் சிறார்கள் ஆபரணம் அணிந்து முடிந்ததும்ஜவ்வுமிட்டாயின் இனிப்புடன் சேர்த்து கை வியர்வையின் உப்புகரிப்பையும் சாப்பிடும் சுவை மறக்கவே முடியாது
 
 

Friday 15 July 2011

தெய்வத் திருமகன்--- உண்மையில் அருமை


  அட போங்கப்பா! இதுக்கு மேல தமிழ் சினிமாவுல புதுசு புதுசா எதையும் பார்க்க முடியாது போல தெரியுது என இருக்கும் ரசிகர்களின் சலிப்பினை கொஞ்சம் பொய்யாக்க விஜய் போன்ற சில டைரக்டா்களால் மட்டும் தான் முடியும் போல தெரிகிறது...

   சிறப்பான ஒரு கதையம்சத்தில் அழகிய ஒளிப்பதிவுடன் ஓடத்தொடங்கியிருக்கிறது தெய்வத் திருமகன்...
 
  குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பை மிஞ்ச யாராலும் முடியாது...

  சியானின் சிறப்பான தோற்றம் பிரமிப்பு ( அவர் ஏற்கெனவே பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது நிதர்சனம்)
 
   வேறு என்ன இசையமைப்பாளர் ஜி.வி பற்றி சொல்லவா வேண்டும்!  சரியான விகிதத்தில் இசையின் நயனம்...

    கதையை நீங்களே சினிமாவில் பாருங்கள் நமக்கு நடிப்பு தானே முக்கியம்... ஆனாலும் மதராச பட்டினத்தில் தேடுதல் வேட்டை காமெடி இந்த படத்திலும் இருப்பது சலிப்பினை ஊட்டுகிறது...

   சென்டிமன்ட் பிரியர்களுக்கு வரபிரசாதம் இந்த படம்...

Sunday 29 May 2011

தமி்ழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய திருப்பம்...

polur
என்னமோ ஏதோ மக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி மட்டும்  தொடர்ந்து ஆட்சி நடத்துவதனை விரும்புவதில்லை அதற்கு காரணம் ஆட்சி மாற்றத்தினாலாவது அவர்களை திருத்தலாம் என்பதற்காகத்தான்-                                           சட்டசபை டதேர்தல் 2011 ல் நடந்ததும் இதுதான்.....